Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் : அடுத்த 3 மணி நேரத்தில்….. 30 மாவட்டங்களுக்கு அலர்ட்….. வானிலை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தொடர்ந்து சில மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.

அந்த வகையில் இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும். மழை பெய்யும் போது அருந்து கிடக்கும் மின் கம்பி அருகே செல்ல வேண்டாம் எனவும், செல்போன், டிவி, மிக்ஸி, போன்ற மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |