நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என மதிய நிலத்தடி நீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடந்த சில நாட்களாக அந்த ஆணையத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு இது பொருந்தாது என்பதை அறிந்து கொள்ளாமல் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் வெளி மாநிலங்களில் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகின்ற நிலையில் பொதுவான விளம்பரமாகவே இது கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 20 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆணையங்கள் இல்லாத நிலையில் அந்த மாநிலங்களில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அப்பணியை செய்து வருகின்றது. தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆணையங்களில் நிலத்தடி நீர் பற்றிய விவகாரங்களை கவனித்துக் கொள்ளும்.
மேலும் தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது உள்ள விதிமுறைகளே தொடங்குகின்றது. இந்த பொது அறிவிப்பு எண் 3/2022 விளம்பரம் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என மதிய நிலத்தடி நீர் ஆணையத்தின் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.