சர்வதேச அளவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடிய ஒரே நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அண்டி கோரம்(58) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட பிரபல கால்பந்து அணிகளுக்கு ஆடியுள்ளார். கால்பந்தில் கோல் கீப்பர், கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் என இரண்டிலும் கலக்கிய இவர், கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் போராடி வந்தார். அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories