புதுச்சேரியை சேர்ந்த முத்துலட்சுமி (35) என்பவர் தனது வீட்டு மாடியில் சத்தியவதி என்ற பெண்ணை குடியமர்த்தியுள்ளார். அதன் பிறகு தனது குடும்ப கஷ்டத்தை அவரிடம் சொல்ல, உங்கள் வீட்டில் தோஷம் இருக்கிறது. இது நீங்க சில பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதனை நம்பி அந்தப் பெண்ணிடம் முத்துலட்சுமி 20 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 37 சவரன் நகைகளை கொடுத்துள்ளார். அதன் பத்து ரூபாய் எலுமிச்சை பழத்தை கொடுத்து பரிகாரம் எனக்கூறி குழந்தைக்கு சூடு வைத்துள்ளார்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துலட்சுமி போலீசில் புகார் அளித்தார். இதில் சோகம் என்னவென்றால், கடைசிவரை வரை லட்சுமி குடும்பத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதுதான். இதனால் அதிர்ந்து போன லட்சுமி இது குறித்து தன்வந்திரி நகர் போலீசில் புகார் தந்தார். போலீசாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சத்யவதியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.