Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுவே முதல்முறை”….இந்திய கேப்டனாக மாறிய தினேஷ் கார்த்திக்…. ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு…!!!!

டெர்பிஷயர் உடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை தலைமை தாங்கியது பற்றி தினேஷ் கார்த்திக் நெகிழ்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால் இந்திய அணியை தலைமை தாங்குவது இதுவே முதல்முறை. பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் அணியை தலைமை தாங்கியதை கௌரவமாக நினைக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இனிமேல் இந்திய அணியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக், தற்போது தனது திறனை நிரூபித்து, 37 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்தது மட்டுமில்லாமல், பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி வீரர்களை தலைமை தாங்கும் வாய்ப்பும் முதல் முறையாக அவருக்கு கிடைத்துள்ளது. இது பற்றி நெட்டிசன்கள் பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தாண்டு டி 20 உலக கோப்பைத் தொடரிலும் அவர் இடம் பிடிப்பார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |