மத்திய அரசின் நவோதயா பள்ளிக்கூடங்களில் 2200 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாட ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர், தலைமை ஆசிரியர், நூலகர்,கலை மற்றும் இசை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் cbseitms.nic.in என்ற அரசு இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு முடித்தவர்கள், இளநிலை, முதுகலை பட்டம், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சி பி டி தேர்வு, நேர்முகத் தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு.