வடகிழக்கு இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இந்த மாநிலத்தில் உள்ள நோனி மாவட்டத்தில் ராணுவத்தின் 107-வது பிராந்திய முகாம் அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமான பாறைகள் உருண்டு விழுந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். சரிவு ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆன நிலையில் அந்த விபத்தினால் 80 பேர் மண்ணில் புதைந்து பலியாகி இருக்கக்கூடும் என்று அம் மாநில முதல்வர் பைரன்சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்டு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில் நீரில் மூழ்கியுள்ள சடலங்களை மீட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.