Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் விவகாரம்: உலகநாடுகள் தலையிடாதீங்க…. எச்சரிக்கை விடுத்த தலீபான்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சென்ற வருடம் ஆகஸ்டில் தலீபான்பயங்கவராதிகள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றினர். இந்நிலையில் முதல் அந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை ஆகிய பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தலீபான்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். இதை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று  உலகநாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்து இருக்கிறது. தலைநகர் காபூலில் நடந்த இஸ்லாமிய மதகுருக்களின் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அந்நாட்டு மூத்தமத தலைவர் மவுலாவி ஹெபதுலா அகுந்த்ஸாதா, “சுதந்திரமாக இன்றி வளர்ச்சியடைய முடியாது. நாங்கள் தற்போது ஒரு சுதந்திர நாடாக இருக்கிறோம். எங்களுக்கு அவர்களின் உத்தரவுகளை வழங்கக் கூடாது. இது எங்களது அமைப்பு, எங்களுக்கு சொந்த முடிவுகள் இருக்கின்றன” என்று அவர் கூறினார்.

 

Categories

Tech |