சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஊழியர்கள் இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் அதிகாலை 3 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் நைட் ஷிப்டில் வேலை பார்க்க வந்த சதீஷ் மற்றும் கோபி என்ற இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது
Categories