பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் விதிகளின்படி கணவன் -மனைவி இருவரும் பயன்பெற முடியாது. அப்படி யாராவது செய்தால் அவரது தகுதி நீக்கப்பட்டு அரசிடம் இருந்து கிடைக்கப்பெறும் பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படும். அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட விவசாயிகளை தகுதியற்றவர்களாக மாற்றும் பல விதிகளும் இந்த திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தகுதி இல்லாத விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டால் அவர்கள் அனைத்து தவணைகளையும் அரசிடம் திருப்பி செலுத்த வேண்டி இருக்கும்.
விவசாயிகளின் குடும்பத்தில் யாராவது வரி செலுத்தினால் இந்த திட்டத்தின் பலன் அவர்களுக்கு கிடைக்காது. அதாவது கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் கடந்த ஆண்டு வருமான வரி செலுத்தி இருந்தால் அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலனை பெற முடியாது.பி எம் கிசான் திட்டத்தின் விதிமுறைகளின் படி ஒரு விவசாயி தனது விவசாய நிலத்தை விவசாய வேலைக்கு பயன்படுத்தாமல் வேறு ஏதாவது வேலைகளுக்கு பயன்படுத்தினால் அல்லது மற்றவர்களின் வயல்களில் விவசாயம் செய்தால் அந்த வயல் அவருக்கு சொந்தமானது கிடையாது.
அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பயன்பெற எந்த தகுதியும் இல்லை.விவசாயம் செய்யக்கூடிய நபர் ஒருவரின் வயல் அவரது பெயரில் இல்லாமல் அவரது தந்தை அல்லது தாத்தா பெயரில் இருந்தால் அவருக்கு இந்த திட்டத்தின் பலன்கள் எதுவும் கிடைக்காது. மேலும் விவசாய நிலையத்தின் உரிமையாளராக ஒருவர் இருந்தும் அவர் அரசு ஊழியராக அல்லது ஓய்வு பெற்றவராக, முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏவாக,அமைச்சராக இருந்தாலும் அவர்களுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் எந்த உதவி தொகையும் கிடைக்காது .
தொழில் முறை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள்,பட்டைய கணக்காளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தகுதியற்றவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பாக வருமான வரி செலுத்தக்கூடிய குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு பலனும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.