சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி 2 மாதம் குலுக்கள் பரிசு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 3 வது மாதாந்திர அதிர்ஷ்ட குழலுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா கலந்து கொண்டுபரிசுகளை வழக்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் ஆர்.முரளி, கூடுதல் மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு, மேலாளர் பி.லக்ஷ்மி மற்றும் கே.எஸ்.அருண், துணை மேலாளர் ஏ.அருள் ராதா, நிர்வாக இயக்குனர் அனந்த கிருஷ்ணன், இயக்குனர் குமணன், பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பணியாளர்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அடுத்த மாதத்திற்கான குழுக்கள் இந்த மாதம் இறுதியில் நடத்தப்படும். பரிசு விவரங்களை தெரிந்து கொள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம்.