Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 04.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

04-02-2020, தை 21, செவ்வாய்க்கிழமை,

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

 

குளிகன் மதியம் 12.00-1.30,

 

சுப ஹோரைகள்

காலை 8.00-9.00,

மதியம் 12.00-01.00,

மாலை 04.30-05.00,

இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

ராசிபலன்

மேஷம் 

பொருளாதார நிலை மிகவும் சிறந்த முறையில் இருக்கும். உறவினர்களின் வருகையினால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீட்டுத் தேவைகளை எளிதில் நிவர்த்தி செய்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் நல்ல பலன் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். தொழில் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும். உடன் பிறந்தவர்கள் மூலம் நற்செய்திகள் கிடைக்கப்பெற்று இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளினால் பெருமை இருக்கும். உடல்நல பாதிப்புகள் இன்று குறையும். வியாபாரம் தொடர்பாக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நல்ல பலனைக் கொடுக்கும். பணவரவு தேவைக்கு ஏற்றார் போல் இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை இன்று குறையும்.

கடகம்

இன்று தாராள தன வரவு இருக்கும். கடன் தொல்லைகள் அகலும். சுபகாரிய முயற்சிகள் முன்னேற்றம் தரும். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமை குறையும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் வெளிவட்டார நட்பினை கொடுக்கும்.

சிம்மம்

இன்று இல்லத்தில் தனவரவு போதுமானதாக இருக்கும். பழைய கடன் தொல்லைகள் அகலும். வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும். பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள்  இருக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். இன்று தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சேமிப்பு வளரும்.

கன்னி 

இன்று உடல் நலத்தில் மந்தநிலை ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் அற்று காணப்படுவார்கள். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும். எதிர் பாராத உதவிகள் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தெய்வீக வழிபாடு நன்மையை கொடுக்கும்.

துலாம்

இன்று சற்று குழப்பமாகவே தென்படுவீர்கள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த செயலையும் பொறுமையுடன் செய்வது நன்று. வெளி இடங்களில் அடுத்தவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது கவனமாக செல்லவும்.

விருச்சிகம்

இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்தேறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் இன்று உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அரசு சார்பாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப் பெறும். வெளியூர் பயணங்களால் நன்மை நடக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை அதிகரிக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் இருப்பவர்கள் சிறிய மாற்றங்களை செய்து லாபத்தைப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் ஒருசிலருக்கு பொறுப்புகள் வந்து சேரும்.

மகரம்

இன்று நிம்மதி குறையக்கூடிய சூழல் இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேற்றுமை தோன்றலாம். உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை நடக்கும்.

கும்பம் 

எந்த காரியத்திலும் தடைகளை சந்திக்கக்கூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன்  வீன் மனவருத்தங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களினால் அலைச்சல் உருவாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் சந்திப்பு புதிய பலத்தை கொடுக்கும்.

மீனம்

இன்று திடீர் பணவரவுகள் இருக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செல்லும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு போன்ற விஷயங்களில் வெற்றி நிச்சயம். தொழிலில் வருமானம் இரட்டிப்பாகும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |