பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பல ஆண்டுகளாக கடுமையான பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீன நாட்டினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தும். கடந்த மே மாதம் 11-ம் தேதி மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இஸ்ரேல் வீரர்கள் ஜெனின் நகருக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இங்கு நடைபெறும் சம்பவங்கள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் பெண் ஊழியர் ஷெரின் அபு அல்லெஹாவும் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வீரர்களுக்கிடையே கடுமையான துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் ஷெரின் அபு அல்லெஹா மீதும் குண்டு பாய்ந்தது. இதில் ஷெரின் அபு அல்லெஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மீது பாய்ந்த குண்டு பாலஸ்தீன அதிகாரிகளிடம் இருந்தது. இந்நிலையில் ஷெரின் அபு அல்லெஹா மீது பாலஸ்தீன நாட்டின் குண்டு பாய்ந்ததா, இல்லையெனில் இஸ்ரேல் நாட்டின் குண்டு பாய்ந்ததா என்பது குறித்து தெரியவில்லை. இதன் காரணமாக பாலஸ்தீன அதிகாரிகளிடம் இருந்த குண்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க தடவியல் நிபுணர்களிடம் இருந்து அறிக்கை வந்த பிறகே ஷெரின் அபு அல்லெஹாவின் இறப்பு குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.