சென்னை ஆவடியில் உள்ள முத்தாபுதுப்பேட்டை ராஜீவ் நகர் 11ஆம் தெருவில் இந்திரா ராணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி(44). இவர் சென்னை தரமுணியில் உள்ள ஐடிஐ நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த போது கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து ஹரி 2 வது திருமணம் செய்து கொள்வதற்காக வரம் தேடி வந்தார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு தோட்ட வேலை செய்ய வரும் ஒரு நபர் மூலம் ஆந்திர மாநில சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை பார்த்து உள்ளார். அவர் தனக்கு 35 வயது என்றும் தனக்கு உறவினர்கள் இல்லை என்றும் தனியாக வசித்து வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு சரண்யாவுக்கும் ஹரிக்கும் உறவினர்கள் முன்னிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இல்லற வாழ்க்கையை தொடங்கிய போது ஹரியின் சொத்து விவரங்களை கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். மேலும் ஹரியையும் அவரது தாயாரையும் மிரட்டி சொத்துக்களை தனது பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர்கள் உடன்படாததால் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக திருப்பதி போலீஸ் நிலையத்தில் ஹரி மற்றும் அவர் தாயார் மீது சரண்யா புகார் கொடுத்துள்ளார் . அதனை தொடர்ந்து ஹரியின் தாயார் இந்திராணி ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் படி, இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து சண்யாவிடம் விசாரணை செய்துள்ளார்.
அந்த விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அவரது உண்மை பெயர் சுகுணா என்று போலியாக சரண்யா என்று கூறியிருப்பது தெரிய வந்தது. இவருக்கு ஏற்கனவே திருப்தியை சேர்ந்த ரவி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருக்கு 2 பெண் பிள்ளைகள் இருப்பதும், பணத்திற்காக ஹரியை ஏமாற்றி மோசடி ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்த ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் சுகுணாவை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஊழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு நேற்று மதியம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் சுகுணாவை கடந்த 2011 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார் .மேலும் ரவி, சுப்பிரமணி, ஹரி போன்ற பலரை சுகுணா ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசில் கூறுகின்றனர்.