தாய் மற்றும் மகள் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 35 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது 12 வயது மகளுடன் நேற்று இரவு மொபட்டில் தோப்பு கொல்லை ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியிலேயே நின்றது. இதனால் 38 வயது பெண்ணும், அவருடைய மகளும் மொபட்டை தள்ளிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஆதிகுரு மற்றும் செல்வகுமார் என்ற 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணிடம் தகராறு செய்து மொபட்டின் சாவியை பிடுங்கிக் கொண்டு ஓடியுள்ளனர்.
அவர்களை துரத்திக் கொண்டு அந்தப் பெண் சென்றுள்ளார். அப்போது வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் படுத்தியதோடு, அவருடைய 12 வயது மகளையும் கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து 38 வயதுடைய பெண் பண்ருட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆதிகுரு மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.