Categories
தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்திய அரசு படுதோல்வி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இளைஞர்களுக்கு வேவைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், வேலைவாய்ப்புகள் குறித்த பெரிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்கள் சார்பாக நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சக் கூடாது. இளைஞர்களுக்கு நீங்கள் பதிலளித்தே ஆக வேண்டும். அது உங்கள் பொறுப்பு. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், அதனை வழங்குவதில் உங்கள் அரசு படுதோல்வி அடைந்துள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Categories

Tech |