வேலை கிடைக்காததால் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த இந்த குடியிருப்பில் வில்லியம் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாப்ட்வேர் என்ஜினியரான ஜெனிபர் என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெனிபருக்கு கொரோனா காலத்தில் வேலை பறிபோனது. இதனையடுத்து ஜெனிபர் பல்வேறு ஐ.டி நிறுவனங்களில் வேலை தேடியுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து ஜெனிபர் கடந்த-2 நாட்களுக்கு முன்பு மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதில் ஜெனிபர் உடல் சிதறி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெனிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் டிரைவர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.