ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு “கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” கீழ்க்கரை முகமது சதக்பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கையிட்டை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டம் அல்ல, முன்னேறி வரும் மாவட்டம். எனவே மாணவ, மாணவிகள் நன்கு கல்வி கற்க வேண்டும். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்வமுள்ள படிப்பை படிப்பது மிக அவசியமாகும். அதனை தொடர்ந்து கல்வி வாய்ப்புகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக ரூ.1000 வழங்கும் திட்ட முதல் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விரைவில் மாணவர்களுக்கு 6 லட்சம் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வியில் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி சிறந்து விளங்கியது. ஆனால் உயர்கல்வியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி பொற்காலமாக திகழ்ந்தது. இந்தியாவில் உள்ள 100% கல்வி பயில்வோரில் தமிழகத்தில் மட்டும் 30% பேர் உயர்கல்வி கற்கின்றனர். மேலும் தொழில் துறையில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து விழாவிற்கு தலைமை வைத்த மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பேசியது, மாணவர்களுக்கு வாழ்வாதார வழிமுறைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் பல மொழிகள் கற்க வேண்டும். நமது மாவட்டத்தில் கடல் சார்ந்த வேலை வாய்ப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் ரஷ்யன், ஜப்பான் மொழி வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.