பொதுமக்கள் வாழைத்தாரை வெட்டி எடுத்துச் செல்லும் வீடியோவானது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் முதல்வர் நேற்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் 582 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 28.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.
அதன் பிறகு 80,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழா முடிந்து முதல்வர் அங்கிருந்து சென்ற பிறகு, விழாவில் கலந்து கொண்ட மக்கள் அங்கு கட்டப்பட்டிருந்த வாழை மரங்களில் இருந்து தாரை கத்தி மற்றும் அரிவாளை எடுத்து வந்து வெட்டி எடுத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.