Categories
உலக செய்திகள்

லிசிசான்ஸ்க் நகரில் ரஷ்யா தீவிர தாக்குதல்… மொத்த ஆயுதங்களையும் பயன்படுத்தியதாக தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் லிசிசான்ஸ்க் என்னும் நகர் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது மாதமாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் டான்பாஸ் நகரில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை முழுமையாக ஆக்கிரமிக்க ரஷ்யா முயன்று வருகிறது.

தற்போது, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் லுஹான்ஸ்க் மாகாணத்தின் லிசிசான்ஸ்க் என்னும் நகரை  ஆக்கிரமிப்பதற்காக அதன் சுற்றுப்பகுதிகளில் ரஷ்ய படையினர் தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். நேற்று ஒரே நாளில் தங்களிடம் இருக்கும் அனைத்து வகையான ஆயுதங்களையும் வைத்து ரஷ்ய படையினர் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருவதாக லிசிசான்ஸ்க் நகரின் கவர்னர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |