Categories
இந்திய சினிமா சினிமா

திடீரென்று மாற்றப்பட்ட அஜய் தேவ்கனின் ‘மைதான்’ பட ரிலீஸ் தேதி!

‘மைதான்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘தனாஜி’ படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மைதான்’. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் இப்படத்தில் சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மைதான் திரைப்படம் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்படத்தில் இருந்து வெளியான அஜய் தேவ்கனின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |