நாடு முழுவதும் தற்போது இணையதள சேவை பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. செல்போனில் இணைய வசதியை பெறுவதால் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுப்புக்கம் நகர்ப்புறங்களில் இணைய சேவையை பெருமளவிற்கு கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இணைய சேவை சரியாக கிடைப்பதில்லை. எனவே இந்த குறைபாட்டை தீர்க்கும் வகையில் கிராமப்புறங்களிலும் எளிதாக இணைய சேவையை “வைஃபை”மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இணைய இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 35,322 நியாயவிடக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் இருக்கும் இடவசதிகள் மற்றும் வாடகை கட்டிடம் என்றால் உரிமையாளரின் ஒப்புதலை பெறுவது, கடைகள் அமைந்திருக்கும் இடங்களின் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டது.
கிராமப்புறங்களில் தற்போதைய இணையதளங்களின் வேகம் 50 முதல் 90 கிலோ பைட்ஸ் ஆக தான் இருக்கின்றது. அரசின் வைஃபை வசதி கிடைத்துவிட்டால் இந்த வேகம் மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது கிராம மக்கள் ரேஷன் கடைகளை இணையதள மையங்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் கட்டணமும் குறைவு தான்.இதன் மூலமாக ரேஷன் கடைகளுக்கு வருமானம் ஈட்டுவதாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.