சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் தலைநகரை அழகு படுத்துவதற்கு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் எழில் கொஞ்சும் மெரினா கடற்கரையை ஆகாயத்தில் சென்றவரே பார்த்து ரசிக்க கூடிய வகையில் ரோப் கார் வசதி ஏற்பாடு செய்யப்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி முனை வரையிலான மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் வசதி போன்று வருவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதனைப் போலவே நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரயில் நிலையம் வரை ரோப் கார் வசதி ஏற்படுத்த முன்மொழிவு பட்டுள்ளது.மேலும் மெரினா கடற்கரையை போலவே அடையாறு ஆற்றை ஒட்டிச்செல்லும் வகையிலும் பாரம்பரிய கட்டிடங்களை ஒட்டி செல்லக்கூடிய வகையிலும் ரோப் கார் வசதி ஏற்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகள் சென்னை மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.