சீன நாட்டில் வடமேற்கு பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீன நாட்டில் வடமேற்கு பகுதியில் அக்கி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என சீன நிலநடுக்க மையம் (சிஇஎன்சி) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 40.88 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 78.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் தரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சீீன நாட்டில் ஜின்ஜியாங் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.