இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்து அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிதி நெருக்கடி காரணமாக குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி கண்டி, வவுனியா மற்றும் Matara உள்ளிட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களில் 100 பேருக்கு மட்டுமே பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த சேவை திங்கட்கிழமை மட்டுமே செய்யப்படும். இந்த பாஸ்போர்ட் சேவைகளை பெற விரும்புபவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 60 நாட்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அவசர வேலையாக வெளிநாடு செல்பவர்கள் மற்றும் வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்பவர்கள் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் சேவைகளை பெறலாம். இதற்கான வாட்ஸ் அப் நம்பரும் வெளியிடப்பட்டுள்ளது.