நடிகர் சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் ஜார்னரில் உருவாகி வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் அறிவித்தது போல் சரியாக மாலை நேற்று 5 மணிக்கு படத்தின் டைட்டிலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘அயலான்’ என்றால் அந்நியன் என்று பொருள். எதற்காக இப்படத்திற்கு ‘அயலான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது? இதற்கும் படத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
மேலும் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திற்குள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் #Ayalaan என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர் . விரைவில் படத்தின் கூடுதல் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Here is the title reveal of the movie #Ayalaan@siva_kartikeyan@Ravikumar_Dir @24AMStudios@kjr_studios#அயலான் pic.twitter.com/wNqVsR0BfP
— A.R.Rahman (@arrahman) February 3, 2020