Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் பாடல் ரிலீஸ் தேதி‌”…. வெளியான அப்டேட்டால் ரசிகர்கள் ஹாப்பி….!!!!!!

விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா திரைப்படத்தின் மூன்றாவது பாடலின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”கோப்ரா”. இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் கோப்ரா திரைப்படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி இருக்கின்றது. உயிர் உருகுதே என்ற பாடலானது வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |