73ஆவது பிரிட்டிஷ் திரைப்பட அகாடமி (பாஃப்டா) விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள, ராயல் ஆல்பர்ட் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரை மையமாக வைத்து வெளியான ‘1917’ திரைப்படம் ஏழு பிரிவுகளின் கீழ், பாஃப்டாவில் விருதுகளை வென்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த காட்சி அமைப்பு என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வென்றுள்ள, 1917 படக்குழுவுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ‘1917’ படம் ஆஸ்கரில் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்கர் விழாவில் ’1917’ படம் எத்தனை விருதுகளை தட்டிச் செல்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
#1917Movie is the winner of 7 @BAFTA Awards including: Best Film, Outstanding British Film, Director, Cinematography, Production Design, Sound, and Special Visual Effects. #EEBAFTAs pic.twitter.com/aLUtZ6Pf6G
— 1917 (@1917) February 2, 2020