Categories
சினிமா தமிழ் சினிமா

‘அப்துல் காலிக்’கின் ‘மாநாடு’… கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்ட வெங்கட் பிரபு..!!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ‘மாநாடு’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயரை வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பின் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்த சிம்பு, விரைவில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவித்தார். நேற்று  பிறந்த நாளை சிம்பு கொண்டாடினார். இதனையடுத்து இப்படத்தில் சிம்பு ‘அப்துல் காலிக்’ என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இப்படத்தில் சிம்பு இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும்; அவரது கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்கள் கூறலாம் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

அப்படி ரசிகர்கள் கூறும் பெயர்கள் படக்குழுவுக்கு பிடித்திருந்தால், அதுவே படத்தில் சிம்புவுக்கு வைக்கப்படும் எனவும்; அந்த ரசிகர் ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என்றும் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

தற்போது அப்துல் காலிக் பெயர் ரசிகர்களில் யாரேனும் கூறிய பெயரா அல்லது படக்குழுவே வைத்த பெயரா என்பது தெரியவில்லை. அதைப் பொறுத்திருந்துதான் அறிந்துகொள்ள முடியும்.

Categories

Tech |