Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்கள் எப்படி இடம் வாங்கலாம்?…. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாமியாரிடம் சண்டை போட்டு மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓதியத்தூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். மேலும் பிரணவ்குமார் என்ற  மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு  கார் விபத்தில் கண்ணனும் அவரது மகள் ஜனனியும் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் நர்மதாவின் கணவன் மற்றும் மகள் இறந்ததற்கு நஷ்டஈடாக பணம் வந்துள்ளது. அந்த பணத்தை கொண்டு  கண்ணனின் தாயாரான தமிழ்ச்செல்வி வீட்டுமனை வாங்கியுள்ளார். இதனை அறிந்த நர்மதா தனது மாமியாரை தட்டி கேட்டுள்ளார். அப்போது 2  பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த நர்மதா தனது தந்தை வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நர்மதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |