விடுதியில் அறை எடுத்து தங்கி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கடந்த 30-ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த வாலிபர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சடைந்தனர்.
பின்னர் போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து வாலிபரின் செல்போனை கைப்பற்றி நடத்திய விசாரணையில் தற்கொலை செய்தவர் கேரள மாநிலத்தில் உள்ள புத்தன்குளம் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ்(35) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆதர்ஷ் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.