Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கி இறந்த நபர்…. போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட உறவினர்கள்…. அரியலூரில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி இறந்த நபரின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் விளந்தை திலகர் நகரில் உத்திராபதி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் உத்திராபதி அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உத்திராபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது உத்திராபதியின் உறவினர்கள் போலீசாரை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் உடல் ஒப்படைக்கப்படும் என கூறியும் உறவினர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் பேச்சாரத்தை நடத்தி உறவினர்கள் சமாதானம் ஆன பிறகு போலீசார் உத்திராபதியின் உடலை ஜெயம்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |