தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24 உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஜூன் 18 வரை தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஜூலை 4 ம் தேதி வரை நீட்டித்து தேர்வு முகமை இயக்கம் அறிவித்திருந்தது.
இதனால் நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் https://cuet.nta.nic.in/ என்று இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டியிருந்தால் அதனை வங்கி கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கி பரிமாற்றம், பேடிஎம் ஆகியவை மூலமாக செலுத்தலாம். இதற்கான விண்ணப்ப கட்டணம் 800 ரூபாய் ஆகும். ஏஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக 500 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள.து மத்திய அரசு பட்டியலில் உள்ளவாறு ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.