Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழிவுநீரால் ஏற்படும் சுகாதார சீர்கேடு…. தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள புளியமரத்தோட்டம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது, நாங்கள் ஆய்வரும் தனியாருக்கு சொந்தமான 25 வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சங்கிலிப்பள்ள ஓடையில் குழாய் மூலம் விட்டு வருகிறோம். ஆனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை குழாய் மூலம் வெளியேற்றலாம் என்றும் இதனால் சுகாதார சீர்கேடு எதவும் இல்லை என்றும் தெரிவித்தனர். கடந்த மே மாதம் குடிநீர் குழாய்க்கு குழி தோண்டினர். அப்போது கழிவுநீர் குழாய் உடைந்து விட்டதால் அங்கிருந்த சிலர் கழிவுநீர் குழாயை அடைத்து விட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் மீண்டும் குழாய் அமைத்தனர். அதன்பின் மீண்டும் அடைத்து விட்டதால் கழிவுநீர் எங்கள் வளாகத்தில் தேங்கியதில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் வெளியே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சென்று தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

Categories

Tech |