பிரபல இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடைய மகன் கலந்து கொள்ளவில்லை.
தமிழ் சினிமாவில் பல சிறப்பான படங்களை இயக்கிய எஸ்.ஏ சந்திரசேகர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்குனராக மட்டுமின்றி படங்களிலும் நடித்தும் வருகிறார். இவர் உருவாக்கிய பல பிரபலங்கள் இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். அதில் குறிப்பாக இயக்குனர் சங்கர், பொன்ராம் போன்றவர்கள் எஸ்.ஏ சந்திரசேகரிடம் இருந்து வந்தவர்கள் தான். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் விஜய்யை உருவாக்கியவரும் எஸ்.ஏ சந்திரசேகர் தான். இந்நிலையில் எஸ்.ஏ சந்திரசேகருக்கும் அவருடைய மகன் தளபதி விஜய் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதன் காரணமாக தந்தையும் மகனும் சரிவர பேசிக் கொள்வதில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக எஸ்.ஏ சந்திரசேகர் பலமுறை வெளிப்படையாக பேசியுள்ளார். இதனையடுத்து தளபதி விஜய் எங்களை வந்து சரிவர பார்ப்பதில்லை என்றும் எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். இந்நிலையில் எஸ்.ஏ சந்திரசேகரின் பிறந்தநாள் விழா அவருடைய வீட்டில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி சோபா மட்டும் கொண்டாடியுள்ளனர். மேலும் திரைத்துறையினர் பலரும் எஸ்.ஏ சந்திரசேகருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாததும் அவருடைய தந்தைக்கு வாழ்த்து சொல்லாததும் ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.