மகனின் திருமணத்திற்கு வந்த மொய்பணத்தை ஓய்வு பெற்ற நூலகர் மாற்றத்திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகத்திற்கு வழங்கியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவிழந்தூர் தென்னமரச்சாலையை சேர்ந்த ஓய்வு பெற்ற நூலக ஜெயக்குமார் என்பவரின் திருமணம் நடைபெற்றது. இவர் அழைப்பிதழில் ஓய்வு பெற்ற நூலகம் ஜெயக்குமார் அன்பளிப்பை தவிர்க்க வேண்டும். அந்தத் தொகையை ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் செய்திட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இருப்பினும் உறவினர்கள் அன்பின் காரணமாக மொய் செலுத்த நேர்ந்ததால் அவர் மண்டபத்தில் உண்டியல் ஒன்றை வைத்து மொய் செலுத்துபவர்கள் அதில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் அதில் செலுத்தினார்கள். அதில் ரூபாய் 83 ஆயிரம் வந்தது. அத்துடன் சிறிது தொகையை சேர்த்து ஒரு லட்சம் ரூபாயை மாற்றத்திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகம், வயதான ஏழை மக்கள் உள்ளிட்டோருக்கு அந்த பணத்தை பிரித்து வழங்கியுள்ளார். இவர் மகனின் திருமணத்திற்கு பெண் வீட்டாரிடம் இருந்து எந்த விதமான வரதட்சணையும் பெற்றுக் கொள்ளவில்லை. இவரின் இந்த செயலை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றார்கள்.