Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கட்டியவன் தமிழன்..! வழிபாடுபவன் தமிழன்..!. சர்சைக்குரிய சுவரொட்டியால் கைது …!!

 தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி சுவரொட்டிகள் ஒட்டியதாகக் கைது செய்யப்பட்ட இருவரையும் வருகிற 16ஆம் தேதி வரை காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் மட்டுமே நடத்தக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தஞ்சை நகரம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அதிகார அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளான தேவன், பாலாஜி ஆகியோரைக் கைது செய்து அனுமதியின்றி சுவரொட்டிகளை ஒட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் தஞ்சாவூர் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜோசப் மோசஸ் செபசிங் முன் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் வருகின்ற 16ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |