Categories
மாநில செய்திகள்

70 ஆயிரம் வேலை வாய்ப்புகள்…. இன்று கையெழுத்தாகும் 60 ஒப்பந்தங்கள்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அவ்வபோது முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு நடத்தி வருகின்றது. இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்று 6000 கோடிக்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகின்றது.சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இதில் 70 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று தொழில்துறை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தவிர பன்னெண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் மூலம் 70ஆயிரம்  வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |