உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியான whatsapp நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை எத்தனை முறை வாட்ஸ் அப் செயலிக்குள் சென்று வருகிறோம் என்று நமக்கே தெரிவதில்லை.சமீப காலமாக பயனர்களுக்கு ஏற்ற லேட்டஸ்ட் அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அள்ளி தெளித்து வருகிறது. வாட்ஸ் அப் செயலி தங்கள் பயன்பாட்டாளர்களை கவரும் வகையில் தொடர்ந்து பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் ஆன்லைன் ஸ்டேட்டஸை ஆப் செய்யும் வசதியை கொண்டு வர உள்ளது.
தற்போது இருக்கும் ஆப்ஷன் படி, நாம் கடைசியாக எப்போது ஆன்லைன் வந்தோம் என்பதை ஆப் செய்யலாம். ஆனால் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது ஆன்லைனில் உள்ளோம் என காட்டும். இந்த புதிய அப்டேட் மூலம் ஆன்லைனையும் ஆப் செய்ய முடியும். மேலும் வாட்சப் செயலியில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை இரண்டரை நாட்கள் வரை அழிக்கும் வசதி அறிமுகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அறிவிப்பு வாட்ஸ் அப் பயனாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.