Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்… 17 மாடி குடியிருப்பில் கோரத் தீ விபத்து… வெளியான வீடியோ…!!!

பிரிட்டனில் இருக்கும் 17 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடத்தில் கோரத் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பிரிட்டனின் ப்ரோம்லி நகரின் செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் 17 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. அந்த கட்டிடத்தின் 15 ஆம் தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்து, மளமளவென வேகமாக பரவ தொடங்கியது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது.

https://twitter.com/PHeiselOBE/status/1543562080887898112

மேலும், அந்த குடியிருப்பின் கூரை பகுதியிலிருந்து கருமையான புகைகள் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தற்போது, தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தீயை அணைக்க நீண்ட நேரம் ஆகும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும் தீ விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது கண்டறியப்படவில்லை. மேலும் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்தும் தகவல் வெளியாகவில்லை.

Categories

Tech |