Categories
உலக செய்திகள்

கருப்பின வாலிபர் மீது துப்பாக்கிசூடு…. 60 குண்டுகள் பாய்ந்து பலியான சோகம்…. போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்….!!!

காவல்துறையினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் ஜேலண்ட் வாக்கர் என்ற இளைஞர் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஜேலண்ட் வாக்கரின் காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் இளைஞர் நிற்காமல் சென்றுவிட்டார். இதன் காரணமாக இளைஞரின் காரை காவல்துறையினர் துரத்தி சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு இளைஞரை காவல்துறையினர் காரில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது காரில் இருந்து இறங்கிய இளைஞர் காவல்துறையினரிடமிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார்.

இதன் காரணமாக இளைஞரை 8 காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் இளைஞரின் மீது 60 குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு காவல்துறையினர் இளைஞரின் காரை சோதனை செய்தபோது அவரின் காரில் துப்பாக்கி இருந்ததாகவும், இளைஞர் எங்களை தாக்க வந்ததால் தான் நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் இளைஞரை சுடும்போது எடுக்கப்பட்ட வீடியோவானது இணையதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் இளைஞரின் கையில் ஆயுதம் எதுவும் இல்லை எனவும், காவல்துறையினர் வேண்டுமென்றே அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் கருப்பின மக்களை காவல்துறையினர் குறிவைத்து சுட்டுக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |