ராகவாலாரன்ஸ் மற்றும் ருத்ரன் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் திரைப்படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம்தான் “ருத்ரன்” ஆகும். இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகயிருக்கும் ருத்ரன் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் வெளியாகிய ருத்ரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் இந்த படத்தின் 2ஆம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கையில் மதுபாட்டில் வைத்தபடி ராகவாலாரன்ஸ் அமர்ந்திருப்பது போல் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி திரை அரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.