Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த அக்காள் தங்கை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ள வேப்பவனூர் கிராமத்தில் பெருமாள்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கன்னியாகுமாரி. இவர்களுக்கு முத்துலட்சுமி(15), சிவசக்தி(13), சிவரஞ்சனி(10), பரமேஸ்வரி(8), காவியா(5) ஆகிய 5 பெண் குழந்தைகளும் சிவபெருமான்(4) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியின் பெற்றோர் ஊரான திருமலை அகரம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு சென்றனர். திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்றது. அப்போது குழந்தைகள் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

அதன்பிறகு நீண்ட நேரம் ஆகி முத்துலட்சுமி, சிவசக்தி வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மற்றும் உறவினர்கள் முத்துலட்சுமியையும், சிவசக்தியையும் பல்வேறு இடங்களில் தேடியபோதும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருமலை அகர கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் முத்துலட்சுமியும் சிவசக்தியும் பிணமாக மிதந்து கிடந்துள்ளனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர் .இது பற்றி தகவல் அறிந்து பெண்ணாட போலிஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீச சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு சிறுமிகளின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |