தமிழ் , தெலுங்கு , இந்தி என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க திரைப்படம் மூலம் கதாநயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இருமொழிகளில் உருவான ஸ்பைடர் திரைப்படம் , கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் , சூர்யா நடிப்பில் உருவான என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து வருகிறார். இவர் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். இதற்கு முன்பு ஒரு சமூக ஊடகங்களில் கோல்ப் மீதான தனது காதலை பற்றி அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில் இவர் மூத்த கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மற்றும் சத்ரு ஜக்கி வாசுதேவனுடன் கோல்ப் விளையாடும் படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 31 வயதான நடிகை ரகுல் பிரதீப் சிங் கருப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்டில் அணிந்திருக்கிறார். அதன் பிறகு சத்ரு ஒரு மஞ்சள் நீற டி-ஷர்ட் போட்டு அதில் “மண்ணை காப்போம்” என்ற வாசகம் இருந்தது. மேலும் கபில்தேவ் கருப்பு சட்டை மற்றும் காக்கி பேன்ட் அணிந்திருந்தார். இவர்கள் மூவரும் கண்ணாடி மற்றும் தொப்பி அணிந்து கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.