Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மால்கள், தியேட்டர், கடைகளில் கடும் கட்டுப்பாடு…. வெளியான உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்தார். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அல்லது இரவு ஊரடங்கு அல்லது கடும் கட்டுப்பாடுகள் ஆகியவை ஏதாவது விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பொது மக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஷாப்பிங் மால்களில் ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், துணிக்கடையில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |