முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியுள்ளது. தொழில் முதலீட்டார்ளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது . 60 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.22,252 கோடி மதிப்பில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின். இதன்மூலம் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.