Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020-21ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 காலியிடங்களில் ஆய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார் மற்றும் கீதாஞ்சலி ஆகியவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவமனை மேற்படிப்பில் சேர்த்த விவாகரத்தில் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு தனியார் கல்லூரிகளுக்கும் இடையில் சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்றும் கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பதை விசாரிக்க சிபிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிபிஎஸ்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனியார் கல்லூரிகளின் நிர்வாகம் ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவம் மேற்படிப்பின் தேர்வுகுழுவின் அப்போது இருந்த செயலாளர் செல்வராஜ் தான் காரணம் என்றும் அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த முறைகேடில் தொடர்புடைய அடையாளம் தெரியாத, அடையாளம் தெரிந்த நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிஐடி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்திரவிட்டது. அதனை தொடர்ந்து இந்த தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவ கல்வி தேர்வுக்கு முன்னாள் செயலாளர் செல்வராஜ் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பன்ன்டாரி தலைமையில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த போது செல்வராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்லூரிகள் தான் அதிக கட்டணத்தை வசூலித்துள்ளனர் .

ஆனால் தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதனையடுத்து அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஏழு கலந்தவர்கள் நடத்திய நிலையில் நீர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடந்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி ஏழுப்பினர். இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு தேர்வு குழு முன்னாள் செயலாளர் செல்வராஜன் மீதான சிபிஐடி விசாரணையை தொடரலாம் என்றும் அவர் மீதான துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் அவருடைய பென்ஷன் உள்ளிட்ட ஓய்வு கால பணப் பலன்களை நிறுத்தி வைக்க ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்வதாக தெரிவித்தார். மேலும் அவர் மீது துணை ரீதியான விசாரணை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

Categories

Tech |