சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது ப்ளூ லைன் மற்றும் கிரீன்லைன் ஆகியவை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் பர்ப்பிள் லைன்,ஆரஞ்சு லைன், ரெட் லைன் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆரஞ்சு லைன் மெட்ரோ சென்னையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இதில் நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையில் பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் வர உள்ளது. இந்த பகுதியில் சுரங்கப் பாதை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பூமிக்கு அடியில் துளையிட்டு வழித்தட அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணியை அடுத்த 4 ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. எனவே மெட்ரோ ரயில் மூலம் தி.நகர் வர விரும்புவர்கள் பனகல் பூங்காற்று ரயில் நிலையத்தில் இறங்கினால் போதும். இந்த ரயில் நிலையம் தீ நகரில் புதிய அடையாளமாக மாறப்போகிறது.
அதனைத் தொடர்ந்து தீ நகர் என்பது சென்னை மாநகர முக்கிய வணிகப் பகுதியாக விளங்குகிறது. அதாவது பாண்டி பஜார், உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு ஆகியவற்றில் ஏராளமான ஜவுளி, பாத்திரம், நகைகள், செல்போன், வீட்டு உபயோக பொருட்கள், விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் நூற்றி கணக்கில் சாலையோர கடைகள் உள்ளது. இதனால் மொத்தம் மற்றும் சிலரை வியாபாரம் என தினசரி பல கோடி ரூபாய்க்கு மேல் தி.நகரில் வர்த்தகமாகி வருகிறது. தமிழக மட்டுமில்லாமல் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கூட தி.நகருக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதிக்கு பேருந்து மற்றும் புறநகர் ரயில் வசதி இருக்கிறது. மேலும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் புதிதாக திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம், சென்னை மெட்ரோ ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் ஆகியவற்றுகு தி.நகரில் இருந்து விரைவாக சென்றடைய முடியும். மேலும் மெட்ரோ ரயில் வருகையால் தி.நகரில் நிலங்களின் விலை பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை