- சனிப்பெயர்ச்சி இப்பொழுதுதான் எல்லோருக்கும் முடிவடைந்து இருக்கிறது. அதனால் எல்லோருக்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கும் சனிப்பெயர்ச்சியில் யாரு, யாரு, பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.அவர்கள் தினம் தோறும் காக்கைக்கு எள் சாதம் வைத்தால் நல்லது என்று சொல்லியிருப்பார்கள்.
- கண்டிப்பாக உங்களுக்கு எல்லா பிரச்சினையும் தீரும் முன்னாடி இருந்தே வலியுறுத்தி சொல்றது என்னன்னா காக்காய் நம் முன்னோர்களின் வடிவில் பாக்கணுங்குறது, கூட அவசியமில்லை.
- சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யக்கூடிய காக்கா ஒரு சிறந்த துப்புரவாளர் ஆக இருக்கிறது. அது சின்ன, சின்ன பூச்சிகள், விஷ ஜந்துகள் வீட்டுக்கு வர்றது எல்லாம் காக்கா கொத்தி விட்டு போயிடும்.
- அதனால நமக்கு எந்த நோயும் வராது. காக்கைக்கு எள் சாதம் வைக்க எந்த விஷயத்தை நம்ம மனசுல வச்சி இருக்கும்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க. எந்த விஷயம் என்றாலும் ரொம்ப சுத்தமாக இருங்கள். ஐதீகத்தின் அடிப்படையில் காலையில் எந்திரிச்சு என்ன சாப்பாடு செய்தாலும் குளிச்சுட்டு தான் செய்யணும் என்று சொல்லப்பட்டு இருக்கும்.
- ஆனா இப்ப இருக்குற அவசர காலத்தில் சாப்பாடு எல்லாம் செஞ்சிட்டு, அப்புறமா குளிக்கிறோம், இருந்தாலும் அந்த பரிகாரம் செய்யணுமுன்னு வரப்ப சாப்பாடு விரதம் இருந்தா காலையில் எந்திரிச்சு குளித்து முடித்த பின்பு சாப்பாடு செய்வோம்.
- அவைகளை மத்தவங்களுக்கு எல்லாம் பரிமாறும்முன்பு பிரஷா கொஞ்சமா சாப்பாட்டை எடுத்து தயிரும் கருப்பு எள்ளும் தான் கலந்து வைக்கவேண்டும். கருப்பு சனீஸ்வர பகவானுக்கு மிகவும் உகந்தது. கருப்பு எள்ளு கலக்கிறது ரொம்ப முக்கியம்.
- அதை கலந்துவிட்டு காலை நேரத்தில் காக்கைக்கு சாப்பாடு வைக்கணும். ஐதீகத்தில் கூறப்பட்டிருக்கிறது. காக்கைக்கு சாப்பாடு காலை மணி 7 ,8ல் சாப்பாடு வைக்கணும்.
- அப்பொழுதான் காக்கா இறைதேடி செல்லும். அந்த நேரத்தில் காக்கை நம் படைக்கும் உணவை எடுத்து செல்லும். சனீஸ்வர பகவானின் வாகனமானது காக்கை. சனீஸ்வர பகவானின் வாகனத்துக்கு நம்ம சாப்பாடு வைக்கிறதுனால சனீஸ்வர பகவான் மனசு குளிர்ச்சி அடைவது மட்டுமல்லாது, நமது முன்னோர்களையும் சாந்தப்படுத்தும்.
- அமாவாசையில் தர்ப்பணம் நடக்கக்கூடிய நேரங்களில் பார்த்தால் காக்கைக்கு சாப்பாடு வைக்கிறோம், அதே போல ஒரு முக்கியமான விஷயம் என்ன, என்றால் என்னால் தினம், தினம் வைக்க முடியாது. பரிகாரம் சொல்லி இருக்காங்க ஆனால் தினமும் வைக்க முடியாது, அப்படின்னா அவங்க குறைந்தபட்சம் சனிக்கிழமை மட்டுமாவது வையுங்கள்.
- இன்னும் சில பேருக்கு பெரிய சந்தேகம் காலையில கொண்டு போய் சாப்பாடு வைக்கிறேன், காக்கா எடுக்கவே இல்லை, எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படியென்றால் கவலைப்படாதீங்க. மற்ற ஜீவன்கள் வந்து எடுக்கும் ஆனால் ஒரு சிலர்க்கு எந்த ஜீவனுமே எடுக்காது.
- நம் முன்னோர்களுக்கு பெரிய குறை வைத்திருக்கிறோம் என்று நினைத்து கொள்ளுங்கள். அதை ஏன் குறிப்பிட்டு சொல்லனும்னா, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, குலகுருதெய்வ வழிபாடு, அப்படிங்கிறது ரொம்ப முக்கியம்.
- அதுல ஏதாவது தடைபட்டு போய் இருக்கும், நம்ம சரியாக செய்யவில்லை என்றால், அவங்களோட கோபம் எப்பவுமே இருக்காது நம்ம மேல, இருந்தாலும் மனசு சங்கடமா இருக்கும். என் வம்சா வழியில் வந்தவன் என்னை திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறானே, என்று ஆதங்கம் இருக்கும்.
- அந்த ஆத்மாவுக்கு உள்ள ஒரு ஏக்கம் இருக்கும் போது, அந்த சாப்பாட்டை எடுக்காது. அதனால் முறையா ஒரு முறை அந்த திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு, அதுக்கப்புறம் காக்கைக்கு சாப்பாடு வச்சீங்கனா கண்டிப்பா எடுக்கும்.
- நீங்க காக்காக்கு வைக்கிற சாப்பாடு வேறு ஜீவன்கள் எடுத்தது, காக்கைக்கு வைத்த சாப்பாடை காக்கை எடுக்கவில்லை ஆனால், ஒரு குருவி வந்து சாப்பிடுவது ஒரு கிளி வந்து சாப்பிடுவது , அப்படிங்கற மாதிரியான குழப்பங்கள் இருந்தால் கவலையே படாதீங்க.
- முதலில் எடுத்து வச்சி சாப்பாட்டை வேறு எந்த உயிரினம் எடுத்தாலும் தவறு கிடையாது. அதே போல நாங்க வைத்ததுமே மற்ற ஜீவன்கள் வந்து எடுப்பது கிளி எடுக்குது, தயவு செஞ்சு விரட்டாதீர்கள்.
- ஒன்னு புரிஞ்சுக்கோங்க எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார். என்று நல்லா தெரிஞ்சுக்கங்க. அதனால ஒன்னும் தப்பு கிஇல்லை. முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய அந்தக் கடன்களை சரியாக செய்து விட்டு அதுக்கு அப்புறம் காக்கைக்கு சாதம் வைத்து, உங்க வாழ்க்கை பாருங்களேன், சில மாற்றங்கள் ஏற்படும்.
- காக்கைக்கு உணவு வைப்பதால் வாழ்க்கையானது சீராக போய்க்கொண்டிருக்கும் அதை மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். அதை விட்டீங்கன்னா உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் வரும்னு தெரியும், என நிறைய கஷ்டம் அனுபவிக்க வேண்டியது இருந்திருக்கும்.
- அதனால் நீக்க முன்னோர்களுக்கு செய்கின்ற காரியம் அதாவது காக்கைக்கு சாப்பாடு வைக்கிறது, மற்ற ஜீவன்களும் சாப்பிடுவதன் மூலமாக அந்த காரிய தடைகள் எல்லாம், அன்று போய் உங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நின்றுபோய் நீங்கள் ஒரு சுமுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
Categories