Categories
உலக செய்திகள்

நியூயார்க்கில் பயங்கரம்…. 29-ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான குழந்தை…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மூன்று வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் 29 ஆம் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 29-ஆம் மாடியிலிருந்து ஒரு 3 வயது குழந்தை தவறி விழுந்திருக்கிறது. குழந்தை விழுந்த சத்தம் பயங்கரமாக கேட்டதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். உடனே வெளியில் வந்து பார்த்தபோது, அந்த குழந்தையின் தாயார், “ஐயோ, என் குழந்தை” என்று கதறி அழுததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையின் தந்தை தன் மகன் விழும் போது பிடித்துக் கொள்வதற்காக சாரக்கட்டின்  மேல் ஏற முயற்சித்தார். ஆனால் முடியாமல் போனது. குழந்தை கீழே விழுந்தவுடன் உடனடியாக தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். எனினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

நியூயார்க் மாகாணத்தின் சட்டப்படி, மூன்றுக்கு அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் உடைய கட்டிட உரிமையாளர்கள், 10 வயது குறைந்த சிறுவர்கள் வசித்தால் ஜன்னல் தடுப்புகளை வைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த குடியிருப்பில் ஜன்னல் தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கிறதா? என்பது தெரியவில்லை. தற்போது, குழந்தை உயிரிழந்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |